பேராசிரியர் அல்லாமா உவைஸ் நூற்றாண்டு விழா இன்று

பிரதம அதிதியாக பிரதமர்

இஸ்லாமிய இலக்கிய பாரம்பரியத்தை தமிழ் இலக்கிய பண்பாட்டுடன் ஒன்றிணைத்த அல்லாமா மஹ்மூத் முஹம்மது உவைஸ் அவர்களின் நூற்றாண்டு விழாவும், நினைவுக் கருத்தரங்கும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெறுகிறது. இந்நிகழ்வுகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ் தலைமையில் நடைபெற உள்ளன. பிரதம அதிதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ கலந்து கொள்வார்.  இந்நிகழ்வில் மற்றும் பலர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

ஆய்வுக் கருத்தரங்கில் பேராசிரியர் எஸ்.தில்லைநாதன் (வாழ்நாள் பேராசிரியர் பேராதனை பல்கலைக்கழகம்) தலைமையேற்று கருத்துரையாற்றுவார். அறிமுக உரையை பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் (மொழித்துறை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்) அவர்களும், கருத்துரைகளை பல பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களும் நிகழ்த்த உள்ளனர். இந்நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை தென்கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் எச். அப்துல் சத்தார், மொழித்துறை, மற்றும் அல்லாமா உவைஸ் குடும்பத்தினர் மேற்கொண்டுள்ளனர்.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றி குறிப்பிட்ட எண்ணிக்கையினர் மட்டும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வுகள் பி.ப 02.30 மணிக்கு ஆரம்பமாகி மொழித்துறைத் தலைவர் கலாநிதி எம்.ஏ.எஸ்.எப். ஸாதியாவின் நன்றியுரையுடன் நிறைவடைய உள்ளன.

Tue, 01/18/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை