விமானக் கழிப்பறையில் சிசு மீட்பு; தாய் கைது

மொரீஷியஸ் தீவின் விமானநிலைய ஊழியர்கள் விமானக் கழிப்பறையின் குப்பைத்தொட்டியில் புதிதாகப் பிறந்த சிசு ஒன்றைக் கண்டெடுத்துள்ளனர்.

எயார் மொரீஷியஸ் விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது அந்த ஆண் குழந்தையை ஈன்றெடுத்ததாக நம்பப்படும் மடகஸ்காரைச் சேர்ந்த 20 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த விமானம் மடகஸ்காரிலிருந்து ஜனவரி முதலாம் திகதி மொரீஷியஸில் தரையிறங்கியுள்ளது. வழக்கமான சோதனையின்போது விமான நிலைய அதிகாரிகள் குழந்தையைக் கண்டெடுத்தனர். அந்தக் குழந்தை சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

கைது செய்யப்பட்டுள்ள பெண் இரண்டு ஆண்டு வேலை அனுமதியின் கீழ் மொரீஷியஸிற்கு வந்துள்ளார்.

Wed, 01/05/2022 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை