வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒன்றை சோதித்ததாக வட கொரியா அறிவித்து ஒரு வாரத்திற்குள் பலிஸ்டிக் ஏவுகணை என்று சந்தேகிக்கப்படும் மற்றொரு ஏவுகணை சோதனையை அந்த நாடு மேற்கொண்டுள்ளது.

உள்ளுர் நேரப்படி நேற்று செவ்வாய்க்கிழமை 07.27 மணிக்கு இது ஏவப்பட்டிருப்பதாக தென் கொரியா குறிப்பிட்டுள்ளது. இந்த ஏவுகணைச் சோதனை பற்றி ஜப்பான் கடலோரக் காவல் படையினரும் தெரிவித்துள்ளனர். பலிஸ்டிக் போன்ற ஏவுகணை சோதிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்கு வெளியே இந்த ஏவுகணை விழுந்துள்ளது.

Wed, 01/12/2022 - 11:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை