இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவுக்கு கொரோனா

அதிவேக நெடுஞ்சாலை ஊழியர்கள் 15 பேருக்கு கொவிட் 19 உறுதி

நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவுக்கு கொவிட் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

முன்னதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

இதேவேளை, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள கொட்டாவ இடைமாற்றில் பணிபுரிந்த 15 ஊழியர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கொட்டாவ இடைப்பாதையில் இருந்து அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழையும் வாகனங்களுக்கான நேற்று டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படவில்லை என அறிய வருகிறது.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கும் கொவிட் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

குமார வெல்கம உள்ளிட்ட குழுவினர் புதிய கட்சியொன்றை உருவாக்க உள்ளதோடு எதிர்வரும் சுதந்திர தினத்தன்று அந்தக் கட்சியின் விசேட நிகழ்வொன்று ஹெரகொல்லவில் நடைபெற ஏற்பாடாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு சுகாதார தரப்பு கோரியுள்ளது தெரிந்ததே. (பா)

Mon, 01/31/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை