மின்சார கட்டணத்தை அதிகரிக்க தீர்மானமில்லை

நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக மின்சார உற்பத்திக்கான செலவும் அதிகரித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலையில் எவ்வித கட்டண அதிகரிப்பும் செய்யப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபை தனது சேவைகளை இலாப நோக்கில் வழங்குவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மின்சாரத்தேவையில் அதிகளவு அனல் மின் மற்றும் நீர் மின் உற்பத்தி மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. எரிபொருள் மூலமான மின் உற்பத்திக்கு அதிக நிதி செலவாவது குறிப்பிடத்தக்கது. எரிபொருள் விலை உயர்வுடன் உற்பத்தி செலவு உயர்ந்துள்ளது.(பா)

Mon, 01/03/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை