புலம்பெயர் தொழிலாளர்களுக்கு டொலருக்கு நிகரான ரூபா

240 ரூபாவை வழங்குமாறு நிமல் ஆலோசனை

புலம்பெயர் தொழிலாளர்களினால் இலங்கைக்கு அனுப்பப்படும் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை 240 ரூபா வரை அதிகரிக்குமாறு தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா யோசனையொன்றை முன்வைத்துள்ளார். அமைச்சரவையில் இந்த யோசனையை தான் முன்வைத்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிக்கின்றார்.

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து பணம் தற்போது கிடைப்பதில்லை என அவர் சுட்டிக்காட்டினார். கறுப்பு சந்தையில் 240 முதல் 245 வரையான பெறுமதியில் டொலர் மாற்றப்படுவதாகவும், வங்கிகளில் 203 ரூபாவிற்கே டொலர் மாற்றப்படுவதாகவும் அவர் கூறுகின்றார். 203 ரூபாவிற்கு டொலரை மாற்றுவதற்கு எந்தவொரு புலம்பெயர் தொழிலாளர்களும் விரும்புவதில்லை என்பதால், தான் இந்த யோசனையை முன்வைத்ததாக நிமல் சிறிபால டி சில்வா தெரிவிக்கின்றார்.

Thu, 01/06/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை