பிரான்ஸில் முறையற்ற பாலுறவுகளுக்கு தடை

பிரான்ஸில் 1791க்கு பின் முதல் முறையாக நெருங்கிய உறவினர்களுக்கு இடையிலான பாலுறவை தடை செய்ய திட்டமிட்டுள்ளது.

சிறுவர்கள் தொடர்புபடாதநெருங்கிய உறவினர்களுக்கு இடையிலான பாலுறவு பிரான்ஸில் தற்போது சட்டபூர்வமானது என்றபோது இந்த முறைதவறிய உறவை அரசு தடைசெய்யவுள்ளது என்று சிறுவர்களுக்கான செயலாளர் அட்ரியேன் டக்குவேட் தெரிவித்துள்ளார்.

“எந்த வயதைக் கொண்டவராக இருந்தபோது உங்களது தந்தை, மகன் அல்லது மகளுடன் பாலியல் உறவை வைத்திருக்க முடியாது” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த சட்ட மாற்றத்தின் மூலம் பிரான்ஸ் ஏனைய ஐரோப்பிய நாடுகளின் போக்கை பின்பற்றவுள்ளது. முன்னர் பிரான்ஸ் புரட்சிக்குப் பின்னரே இந்தத் தடை நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Thu, 01/13/2022 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை