சட்ட மாஅதிபரிடம் அறிக்கை தருமாறு கோரிக்கை

கொழும்பு பிரதான நீதவான் கோரல்

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டமை குறித்து முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பான சட்டமா அதிபரின் ஆலோசனை அறிக்கையை கொழும்பு பிரதான நீதவான் கோரியுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் 2018 ஜுலை மாதம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், தமிழீழ விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் தொடர்பான சர்ச்சையான கருத்தை தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அக்காலகட்டத்தில் அவர் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

 

Sat, 01/29/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை