தென்னாபிரிக்க பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் பாரிய தீ

தென்னாபிரிக்க பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் பாரிய தீ-South Africa Cape Town National Assembly-Parliament-Building Caught Fire

தென்னாபிரிக்காவின் கேப்டவுனில் உள்ள அந்நாட்டு பாராளுமன்ற கட்டடத்த தொகுதியில் பாரிய தீ ஏற்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்நாட்டு நேரப்படி மு.ப. 5.00 (இலங்கை நேரப்படி மு.ப. 8.30) மணியளவில் தீ அலாரம் ஒலித்துள்ளதோடு, மு.ப. 7.30 மணியளவில் அக்கட்டடத்தில் புகைமூட்டத்தை அவதானிக்கக் கூடியதாக இருந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற கட்டடத்தின் 3ஆம் மாடியில் தீ ஏற்பட்டுள்ளதோடு, அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற அவைக்குள்ளும் தீ பரவியுள்ளது. தற்போது கட்டடத்தின் கூரைப் பகுதி தீப்பிடித்துள்ளதாகவும், முழு பாராளுமன்ற கட்டடத் தொகுதியிலும் தீ பரவியுள்ளதாகவும், கேப்டவுன் பேச்சாளர் ஒருவர் AFP செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

தீ இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை எனவும், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் அந்நாட்டு தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டு வருவதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தீ பரவலுக்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

தென்னாபிரிக்க பாராளுமன்றம் 3 தொகுதிகளைக் கொண்டுள்ளதுடன், இதன் பிரதான மற்றும் பழமையான கட்டடம் 1884ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் 1920கள் மற்றும் 1980 களில் மேலும் இரு புதிய கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

Sun, 01/02/2022 - 13:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை