விவசாயத்திற்கான நீர் தடங்கலின்றி வழங்கப்படும்

அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ உறுதி

விவசாயத்திற்கு தேவையான நீரை எதிர்வரும் காலங்களில் எவ்வித தடங்கலும் இன்றி வழங்க எதிர்பார்த்துள்ளதாக நீர்ப்பாசன அமைச்சரான சமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இயற்கை காரணங்களால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறையும் பட்சத்தில் மின்சார உற்பத்திக்காக நீரை விநியோகிக்காமல் பயிர்ச்செய்கை மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு

முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

நீர் விநியோகத்தை நிர்வகிப்பது அவர்களின் பொறுப்பாகும் என்றும் , பயிர்ச்செய்கைக்கு நீர் வழங்கும் போது அனைத்து அம்சங்களையும் கருத்திற் கொள்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

வரட்சியினால் நீர்மட்டம் குறைந்தால் நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நீர் வழங்கப்படமாட்டாது, ஏனெனில் விவசாயத் துறையைப் பாதுகாக்க வேண்டும். வளிமண்டலவியல் திணைக்களத்தின் பரிந்துரைகளை பரிசீலிப்பதாகவும், அவர்கள் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நீர் பதுக்கி வைக்கப்படமாட்டாது, தேவைப்படும் போது வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Fri, 01/28/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை