தலிபான்களை விமர்சித்த பிரபல பேராசிரியர் கைது

தலிபான்களின் ஆட்சியையும் அதன் தலைமையையும் கடுமையாக விமர்சித்தார் எனக் குறிப்பிட்டு ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகத்தின் பிரபல பேராசிரியர் பைசுல்லா ஜலால், காபூலில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காபூல் பல்கலைக்கழகத்தில் நீண்ட காலமாக சட்டம் மற்றும் அரசியல் விஞ்ஞானப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் இவர், தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கலந்து கொண்டு, ஆப்கானிஸ்தானின் நிதி நெருக்கடிக்கு தலிபான்களைக் குற்றம் சாட்டியதோடு வலுக்கட்டாயமாக ஆட்சி செய்வதாகவும் விமர்சனம் செய்தார்.

இந்நிலையில் பேராசிரியர் ஜலாலின் மனைவி மஸுதா, தனது கணவர் தலிபான் படையினரால் கைது செய்யப்பட்டு அடையாளம் காணப்படாத இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாக அல் ஜஸீரா தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் ஹர்சாயியை எதிர்த்து 2004 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண் வேட்பாளர் மஸுதா என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sun, 01/16/2022 - 12:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை