வடகொரியாவினால் மற்றொரு ஏவுகணைச் சோதனை

வட கொரியா கடந்த இரண்டு வாரங்களில் மூன்றாவது முறையாக நேற்று அடையாளம் தெரியாத ஏவுகணையை வீசி சோதனை செய்திருப்பதாக தென் கொரியா மற்றும் ஜப்பான் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

முந்தைய ஏவுகணை சோதனைகளை அடுத்து அமெரிக்கா வட கொரியா மீது புதிய தடைகளை விதித்த நிலையிலேயே இந்த சோதனை இடம்பெற்றுள்ளது. என்னும் தமது தற்பாதுகாப்பிற்கான உரிமையை விட்டுக்கொடுக்கப்போவதில்லை என வட கொரியா உறுதியாக குறிப்பிட்டுள்ளது.

‘வட கொரியா கிழக்கை நோக்கி அடையாளம் தெரியாத ஏவுகணைகளை வீசியது’ என்று தென் கொரிய கூட்டுப்படை தளபதி தெரிவித்துள்ளார். எனினும் அது பற்றி வேறு எந்த விபரத்தையும் அவர் வெளியிடவில்லை.

பலிஸ்டிக் ஏவுகணை அல்லது ஏவுகணைகள் என்று தோன்றக்கூடிய ஏவுகணைகளை வட கொரியா உள்ளூர் நேரப்படி 14 மணி 55 நிமிடங்களில் ஏறிந்தததை அவதானிக்க முடிந்ததாக ஜப்பான் எல்லையோர காவல்படை தெரிவித்தது.

வட கொரியா கடந்த ஜனவரி 5 மற்றும் 11 ஆம் திகதிகளில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வீசி சோதனை செய்ததாக அறிவித்திருந்தது.

Sat, 01/15/2022 - 07:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை