ஒமிக்ரோன் திரிபுடையோர் நூறுபேர் வரை அடையாளம்

சுகாதார அமைச்சு அதிகாரி தெரிவிப்பு

இலங்கையில் ஒமிக்ரோன் திரிபுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஐ அண்மித்துள்ளதாக சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மக்கள் மூன்றாம் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது

கட்டாயமாகும் என்று சுகாதார அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்ற போதும், ஒமிக்ரோன் திரிபுடன் அடையாளம் காணப்படுகின்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது.ஒமிக்ரோன் திரிபானது மிக வேகமாகப் பரவக்கூடியது. எனவே பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். மக்கள் முறையாகச் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றாவிட்டால், இது பேராபத்தை ஏற்படுத்தும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Wed, 01/12/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை