மத்திய கிழக்கின் மீது சீனா அதிக அவதானம்

புதைபடிம எரிபொருட்கள் குறைவடைந்து வருகின்ற நிலையில் புதுப்பிக்கத்தக்க சக்தி ஆற்றலில் அதிக கவனம் செலுத்தப்படும் சூழலில் மத்திய கிழக்கின் புதைபடிம எண்ணெய் மீதான எதிர்பார்ப்பை சீனா அதிகரித்துள்ளது என்று ஏசியா டைம்ஸ் தெரிவித்துள்ளது.

மசகு எண்ணெய்க்காக மத்திய கிழக்கை சீனா பெரிதும் சார்ந்துள்ளது. 2020 இல் சுமார் 176 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மசகு எண்ணெய்யை அந்நாடு இறக்குமதி செய்துள்ளது. அவற்றில் சுமார் 47 வீதம் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

எண்ணெய்க்காக வெளிநாட்டு விநியோகஸ்தர்களை 70 வீதத்திற்கும் மேல் சீனா சார்ந்துள்ளது.

Mon, 01/10/2022 - 08:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை