கசகஸ்தானில் அவசர நிலை

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக கசகஸ்தானில் ஏற்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறியுள்ள நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி இரண்டு வாரங்கள் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்.

நாடு முழுவதும் பல பகுதிகளில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

நாட்டின் மிகப்பெரிய நகரான அல்மட்டியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டதோடு வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.

ஜனாதிபதி காசிம் ஜொமார்ட் டொகாயேவ் பிறப்பித்த ஆணையில், இந்த பதற்றத்திற்கு மத்தியில் அரசாங்கத்தின் விலகலை அங்கீகரிப்பதாக குறிப்பிட்டுள்ளார். பிரதிப் பிரதமரான அலிகான் ஸ்மைலோவை புதிய இடைக்கால பிரதமராகவும் நியமித்துள்ளார்.

Thu, 01/06/2022 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை