இரண்டு மாதங்களின் பின் பூஸ்டர் தடுப்பூசி பெறலாம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் அதனையடுத்து இரண்டு மாதங்களுக்குப் பின்னர் மூன்றாவது தடுப்பூசியான பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என விசேட மருத்துவ நிபுணர்  ஆனந்து விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். சுகாதார அதிகாரிகள் இதற்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் ஆறு மாதங்களுக்குப் பின்னரே மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ள நிலையில் விசேட மருத்துவ நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம நேற்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செயற்திட்டத்தின் வெற்றிகரமான ஒரு வருட நிறைவையொட்டி ஐடிஎச் வைத்தியசாலையில் நடைபெற்ற நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். (ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 01/31/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை