தைப் பொங்கல் திருநாள் மலையக சமூக மேம்பாட்டுக்கு வழிகாட்டட்டும்

வாழ்த்துச் செய்தியில் இராஜாங்க அமைச்சர் ஜீவன்

உலகமெங்கும் வாழும் இந்து மக்கள் வருடந்தோறும் தை மாதம் முதலில் கொண்டாடும் மங்களத் திருநாள் தைப்பொங்கலாகும். இந் நன்நாளில் பெருந்தோட்ட மக்களுக்கு இ.தொ.கா அதன் சார்பில் இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றதென இ.தொ.கா பொதுச் செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான, ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அவர் தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

இதுவரை காலமும் தீர்க்கப்படாத கோரிக்கைகள்,  மலையக சமுதாயத்தின் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் ஆகியவற்றுக்குத் தக்க பரிகாரம் காண இப்பொங்கல் பெருநாள் வழி சமைக்குமென்ற நம்பிக்கையோடு இவ்வருடத்தில் மலையக மக்களுக்கு மிகவும் நன்மையான காரியங்கள் கிட்டுமெனவும் நாம் எதிர்பார்க்கின்றோம்.

ஏர்பூட்டு உழவனின் எழுச்சிப் பொங்கல் எல்லார் வாழ்விலும் மலர்ச்சியையும் மங்களத்தையும் ஏற்படுத்த வேண்டுமென பழைய எண்ணங்கள் சிந்தனைகள் யாவற்றையும் களைந்து பொறுப்புள்ள பிரஜையாக வாழவும் வரும் நாட்களெல்லாம் சுறுசுறுப்பான நாட்களாக நகரவும் சகல சௌபாக்கியங்களும் அனைவருக்கும் சமமாக கிட்டவும் வாழ்த்துவதில் பெருமகிழ்வடைகின்றேன். அனைவருக்கும் எமது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டுமென்றும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Fri, 01/14/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை