'கொரோனா இன்னும் முடியவில்லை' உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா பெருந்தொற்று முடிவை நெருங்கி உள்ளதான கூற்றுத் தொடர்பில் உலகத் தலைவர்களை உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதிதாக ஆதிக்கம் செலுத்திவரும் ஒமிக்ரோன் திரிபு மிதமானது மற்றும் வைரஸ் மீதான அச்சுறுத்தலை அகற்றும் என முடிவுக்கு வருவதற்கு எதிராக கெப்ரியேசஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.

சில ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று சாதனை அளவுக்கு அதிகரித்திருக்கும் நிலையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

பிரான்ஸில் கடந்த செவ்வாய்க்கிழமை சுமார் அரை மில்லியன் புதிய தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் செய்தியாளர் மாநாட்டில் பேசிய கெப்ரியேசஸ், கடந்த வாரத்தில் ஒமிக்ரோன் திரிபு உலகெங்கும் 18 மில்லியன் புதிய தொற்று சம்பவங்களுக்கு காரணமாகியுள்ளது என்றார்.

சராசரியாக இந்தத் திரிபு குறைந்த தீவிரத்தை வெளிப்படுத்துவதாக ஆதாராங்கள் வெளியிடப்பட்டபோதும், இது மிதமான நோய்ப் பாதிப்பை கொண்டது என்று கூறுவது தவறாக வழிநடத்துவதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

“ஒமிக்ரோன் மருத்துவனையில் அனுமதிக்கப்படுவது மற்றும் உயிரிழப்புகளுக்கு காரணமாவதோடு தீவிரமற்ற தொற்றை கொண்டபோதும் சுகாதார வசதிகளை நெடுக்கடிக்கு உள்ளாக்குகிறது என்பது தவறில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒமிக்ரோன் திரிபின் அசாதாரணமான அதிகரிப்பினால் புதிய திரிபுகள் தோன்ற வாய்ப்பு இருப்பதாலேயே பின்தொடர்தல் மற்றும் மதிப்பீடு மேற்கொள்ளல் தொடர்ந்து தீர்க்கமானதாக உள்ளது என்று உலகத் தலைவர்களை அவர் எச்சரித்தார்.

மேலும், "தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள விகிதம் குறைவாக உள்ள பல நாடுகளைப் பற்றி நான் குறிப்பாகக் கவலைப்படுகிறேன். ஏனெனில், மக்கள் தடுப்பூசி போடாததால், கடுமையான நோய் மற்றும் உயிரிழப்பு அபாயம், பல மடங்கு அதிகமாக உள்ளது," என்று அவர் கூறினார். உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை நடவடிக்கைகளுக்கான பிரிவின் பணிப்பாளர் டொக்டர் மைக் ரயான், ''ஒமிக்ரோனின் பரவல் அதிகரிப்பது, மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுக்கும். குறிப்பாக குறைவான மக்களுக்கே தடுப்பூசி போட்டுள்ள நாடுகளில் இது அதிகமாக இருக்கும்,'' என்று எச்சரித்தார்.

புதிய ஒமிக்ரோன் திரிபு பரவுவதால் ஐரோப்பா முழுவதும் புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் அதிகரித்து வருகின்றன.

டென்மார்க்கில், செவ்வாய்க்கிழமை அன்று 33,493 பேர் கொவிட்--- தொற்றுக்குப் பாதிக்கப்பட்டனர். அதேநேரத்தில் இத்தாலியில் சுகாதார அதிகாரிகள் 228,179 பேருக்கு தொற்று பாதிப்பு உள்ளதாகப் பதிவு செய்துள்ளனர். இதற்கு முந்தைய நாளின் எண்ணிக்கை, 83,403 ஆக இருந்தது. இதற்கிடையில், பிரான்ஸ் செவ்வாய்க்கிழமை 464,769 பேருக்கு நோய்த்தொற்று இருப்பதைப் பதிவு செய்தது. திங்கட்கிழமையன்று, 102,144 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. ஒரே நாளில் நான்கு மடங்கு அதிகமாகத் தொற்றுப் பரவல் நிகழ்ந்துள்ளது. நோய்த்தொற்றுகள் இப்போது வாராந்திர சராசரியாக ஒரு நாளைக்கு 3,00,000 என்ற எண்ணிக்கையைக் கடந்துள்ளன.

Thu, 01/20/2022 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை