பொலிஸாருக்கு அவப்பெயரை ஏற்படுத்த சிலர் தீவிர முயற்சி

மிரிஹான சம்பவம் குறித்து பொலிஸார் அறிக்கை

மிரிஹான ஜூபிலி போஸ்டில் உள்ள பால்மா விற்பனை நிலையத்தை பொலிஸார் சோதனை செய்து சீல் வைத்ததாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் ஆதாரமற்றவை, அவை வதந்திகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக அவர்கள்  அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

பெல்வத்த பால்மா பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமைக்கான காரணத்தை கண்டறியுமாறு மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த கடையில் பால் மா விநியோகம் செய்வதற்கு ஒரு கவுண்டரை மட்டும் பயன்படுத்தியதால் நீண்ட வரிசைகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, இது தொடர்பில் உரிய நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டதுடன், விற்பனை கவுண்டர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும், நேற்று பொதுமக்களுக்கு பால் மாவை விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்க பெல்வத்த நிறுவனம் இணக்கம் தெரிவித்தது.

அதன்படி, சட்டவிரோதமாக வந்து பால் மா விற்பனை நிலையங்களுக்கு சீல் வைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டை நிராகரிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

Sat, 01/01/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை