தங்கத் தேரை கைவிட்டது நெதர்லாந்து அரச குடும்பம்

அடிமைத்துவத்துடன் தொடர்புபட்டது என்ற விமர்சனத்தை அடுத்து நெதர்லாந்து அரச குடும்பம் தங்கத் தேரை பயன்படுத்துவதை நிறுத்திக்கொண்டுள்ளது.

குதிரையினால் இழுத்துச் செல்லப்படும் இந்தத் தேர், நாட்டின் கடந்தகால காலனித்துவத்தின் பெருமையை காட்டுவது போல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. எனினும் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் நெதர்லாந்து மன்னர்கள் அந்நாட்டு பாராளுமன்றத்தின் திறப்பு நிகழ்வின்போது மாத்திரமே சம்பிரதாயமாக இந்தத் தேரை பயன்பத்தி வருகின்றனர்.

நாட்டின் கடந்த கால வரலாறு பற்றிய விவாதம் வலுத்திருக்கும் சூழலிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தத் தேர் பெரும் எண்ணிக்கையான மக்களை தாக்குவதை ஒப்புக்கொண்டிருக்கும் நெதர்லாந்து மன்னர் வில்லம் அலெக்சாண்டர் நாடு தனது காலனித்துவ பாரம்பரியத்தை ஒன்றாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

‘எமது காலக் கண்ணாடியின் வழியாக நிகழ்ந்தது பற்றி கண்டிப்பது மற்றும் தகுதி நீக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

இனவாதத்திற்கு எதிரான நெதர்லாந்து அமைப்பு இந்த முடிவை வரவேற்றுள்ளது. எனினும் காலனித்துவ மரபை எதிர்கொள்ள மன்னர் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

17 ஆம் நூற்றாண்டில் நெதர்லாந்து இந்தோனேசியா, தென்னாபிரிக்கா, கர்கவோ மற்றும் நியுகினியாவின் பெரும் பகுதியை ஆக்கிரமித்ததோடு அட்லாண்டிக் கடல் பகுதியின் அடிமை வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகித்தது.

ஆம்ஸ்டர்டாம் நகர மேயர் அந்த நகர் அடிமை வர்த்தகத்தில் பங்கேற்றது தொடர்பில் கடந்த ஆண்டு உத்தியோகபூர்வமாக மன்னிப்புக் கோட்டார்.

Sun, 01/16/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை