A/L, புலமைப்பரிசில் பரீட்சை திகதிகளில் மாற்றம் எதுவுமில்லை

இந்த வருடத்தில் நடைபெறவுள்ள க.பொ.த (உ/த) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, சாதாரண தர பரீட்சை ஆகிய பரீட்சைகள் நடைபெறும் தினங்களில் மாற்றமெதுவும் இல்லை என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி. பெரேரா தெரிவித்தார். உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2021 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவிருந்தது. இருப்பினும் இவை இரண்டு முறை பின்போடப்பட்டன.

முன்பு திட்டமிட்ட வகையில் புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி 22 ஆம் திகதியும் உயர்தர பரீட்சை இந்த வருடம் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கும் எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில சி. பெரேரா மேலும் தெரிவித்தார்.

 

Thu, 01/13/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை