அமானா வங்கியின் வரிக்கு பிந்திய இலாபம் 89% ஆக அதிகரிப்பு

அமானா வங்கி தனது இலாபகரமான செயற்பாடுகளை மேலும் உறுதிசெய்யும் வகையில் 2021 செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஒன்பது மாதகாலப்பகுதியில் முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் வரிக்குமுந்திய இலாபத்தில் 89% வளர்ச்சியை பதிவுசெய்து ரூ. 736.3 மில்லியனாக பதிவு செய்திருந்தது. 2020 ஆம்ஆண்டின் இதேகாலப்பகுதியில் வங்கியின் வரிக்குபிந்திய இலாபம் ரூ. 389.4 மில்லியனாக பதிவாகியிருந்தது. தொற்றுப்பரவல் காரணமாக இலங்கை மோசமாக பாதிப்படைந்திருந்த மூன்றாம் காலாண்டு பகுதியில் அமானாவங்கியின் வரிக்குமுந்திய இலாபம் 66% இனால் வளர்ச்சியடைந்து முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் இப்பெறுமதி ரூ. 138.9 மில்லியனாக காணப்பட்டது.

வங்கியின்தொடர்ச்சியான இலாபகரத் தன்மைக்கமைவாக, இலங்கை மத்தியவங்கியின் வழிகாட்டுதல்களின் பிரகாரம், தொடர்ச்சியாக 4ஆவது பங்கிலாபத்தை வழங்குவதாக அறிவித்திருந்தது. ரூ. 260.1 மில்லியனாக இந்தத்தொகை அமைந்திருப்பதுடன், முன்னர் செலுத்தப்பட்ட பங்கிலாபங்களுடன் ஒப்பிடுகையில் 30% உயர்வாகும். காலாண்டில் ஃபிட்ச்ரேட்டிங்ஸினால் வங்கியின் தேசிய நீண்டகால தரப்படுத்தல் உறுதியான புறத்தோற்றத்துடன் BB+என அறிவிக்கப்பட்டிருந்தது. சவால்கள் நிறைந்த பொருளாதார சூழலில்வங்கியின் நிதிவலிமை மற்றும் நிலையான வினைத்திறன் போன்றன தொடர்பில் மதிப்பாய்வு செய்யப்பட்டு இந்த தரப்படுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

வங்கியின் நிதிப்பெறுபேறுகள் தொடர்பாக பிரதமநிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “மூன்றாம் அலைத்தாக்கம் காரணமாக ஏற்பட்ட பொருளாதார பின்னடைவுகளுக்கு மத்தியிலும், அமானா வங்கியினால் உறுதியான மீட்சியை பதிவுசெய்ய முடிந்ததுடன், சிறந்த காலாண்டுப் பெறுபேறுகளை பதிவுசெய்யக்கூடியதாக இருந்தது. எமது பணிப்பாளர் சபையின் அங்கத்தவர்களின் வழிகாட்டல்கள், ஊழியர்களின் அர்ப்பணிப்பான செயற்பாடுகள் மற்றும் எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்கள் வெளிப்படுத்தியிருந்த நம்பிக்கை போன்றவற்றினூடாக எம்மால் இந்த சிறந்த பெறுமதிகளை பதிவு செய்யமுடிந்தது. 2021 ஆம்ஆண்டு நிறைவை எய்தியுள்ள நிலையில், பொருளாதார மீட்சிக்கு அமானா வங்கி தொடர்ந்தும் உறுதியான பங்களிப்பை வழங்கும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.” என்றார்.

 

Wed, 01/05/2022 - 06:00


copied Thinakaran.lk

கருத்துரையிடுக

புதியது பழையவை