பிரான்ஸ் புத்தாண்டு தினத்தில் 814 கார்களுக்குத் தீ வைப்பு

பிரான்ஸ் புத்தாண்டு தினத்தில் 814 கார்களுக்குத் தீ வைப்பு-France New Year Car Destroyed

பிரான்ஸில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மொத்தம் 814 கார்கள் தீ வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதாக உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அந்த ஆண்டில் 1,316 கார்களுக்கு தீ வைக்கப்பட்டன.

கொரோனா தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள் காரணமாகவே இந்த எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக கொரோனா தொற்றுக்கு எதிராக முடக்க நிலை அமுலில் இருந்ததால் 2020 புத்தாண்டில் இவ்வாறான கார்களுக்கு தீவைக்கும் சம்பவங்கள் பதிவாகவில்லை. 2005 ஆம் ஆண்டு பல நகரங்களில் இடம்பெற்ற கலவரத்தைத் தொடர்ந்து பிரான்ஸ் புறநகர் பகுதிகளில் கார்களுக்கு தீமூட்டுவது வருடாந்த நிகழ்வாக மாறியுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சுமார் 95,000 பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதோடு இதில் 32,000 தீயணைப்பு படையினரும் உள்ளடங்குவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

Mon, 01/03/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை