மாணவர்களுக்கான சீருடை துணி 68 சதவீதமானவை கையளிப்பு

இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த

 

இந்த வருடத்தில் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான பாடசாலை சீருடைத் துணிகளில் 68 வீதமானவை தற்போது வலய கல்வி காரியாலயங்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், இந்த வருடத்தில் பாடசாலை மாணவர்களின் சீருடைக்காக 12,694,000 மீட்டர் சீருடைத் துணிகள் தேவைப்படுவதுடன் அதில் 68 வீதமானவை இதுவரை கல்வி வலய காரியாலயங்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மீதமானவற்றை இந்த மாத இறுதிக்குள் வலயக்கல்வி காரியாலயங்களுக்கு அனுப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வருடங்களில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறா விட்டாலும் 45 லட்சம் பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் இலவச பாடப்புத்தகங்கள் சப்பாத்துக் களுக்கான வவுச்சர்கள் ஆகியன பெற்றுக் கொடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 01/13/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை