65 வயதாக உயர்த்திய வர்த்தமானி வெளியானது

அரசாங்க ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்தியதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மாகாண மற்றும் உள்ளூராட்சி சபைகளின் பொது சேவை அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின் கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தின்படி அரச ஊழியர்களின் ஓய்வு வயதை 65 ஆக நீடிக்க அரசாங்கம் தீர்மானித்தது.

இதன்படி, இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 65 ஆக மாற்றுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Fri, 01/21/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை