அணு ஆயுதத் தடுப்பு: 5 நாடுகள் கூட்டறிக்கை

அணு ஆயுதப் பரவலைத் தடுப்பது மற்றும் அணு ஆயுதப் போர் ஒன்று நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் கூட்டறிக்கை ஒன்றை ஐந்து அணு சக்தி நாடுகள் வெளியிட்டுள்ளன.

ஐ.நா பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா மற்றும் பிரான்ஸ் இந்த கூட்டறிக்கையை கடந்த திங்கட்கிழமை வெளியிட்டுள்ளன.

அணுவாயுதப் போரை வென்றுவிட முடியாது என்றும் அதை ஆரம்பிக்கவே கூடாது என்றும் அவை குறிப்பிட்டன. ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே, உக்ரைனிய விவகாரம் குறித்துப் பதற்றம் அதிகரித்துவரும் வேளையில் இந்தக் கூட்டறிக்கை வெளியாகியுள்ளது. ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவும் பதற்றம் பூசலுக்கு இட்டுச்செல்லக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. அணுவாயுத விநியோகம் தொடர்பான பிரகடனத்தை ரஷ்யா வரவேற்றுள்ளது. அதன்மூலம் உலகளவில் நிலவும் பதற்றங்கள் தணியும் என அது குறிப்பிட்டது. நாடுகளுக்கிடையே பரஸ்பர நம்பிக்கையை வளர்க்க புதிய உறுதிமொழி வகைசெய்யும் என்று சீனா குறிப்பிட்டது.

அதிகாரம் கொண்ட நாடுகளுக்கிடையே போட்டித்தன்மைக்குப் பதிலாக ஒத்துழைப்பு கூடும் என்று சீனா கூறியது.

Wed, 01/05/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை