4 வயதில் கடத்தப்பட்டவர் 33 ஆண்டுகளின் பின் தாயுடன் இணைந்தார்

4 வயதில் கடத்தப்பட்டவர் 33 ஆண்டுகளின் பின் தாயுடன் இணைந்தார்-China-After 33 Year Met His Mother

சீனாவில் 33 ஆண்டுகளுக்கு முன் 4 வயதுச் சிறுபிள்ளையாக இருந்தபோது கடத்தப்பட்ட ஒருவர், மீண்டும் தன் தாயாருடன் சேர்ந்தார்.

அவரைச் சிறுவர்க் கடத்தல் கும்பல் ஒன்று கடத்தியிருந்தது. அவர் சிறுவயதில் வாழ்ந்த கிராமத்தின் வரைபடத்தை ஞாபகத்தில் கொண்டு வரைந்தே தனது தாயை கண்டுபிடித்துள்ளார்.

கடந்த டிசம்பரில் அவர் அந்த வரைபடத்தை சமூக ஊடகத் தளமான டுயினில் பதிவேற்றம் செய்தார். அந்தச் சிறு கிராமத்தின் வரைபடத்தைச் சீன பொலிஸ் அதிகாரிகள் அடையாளம் கண்டனர். அதுபற்றி அவருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

மரபணுப் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் தாயும் மகனும் மறுபடியும் ஒன்று சேர்ந்தனர். இருவரும் யுனான் மாநிலத்தில் சந்தித்தனர். கண்ணீர் வழிய அவர் தன் தாயாரைக் கட்டி அணைத்தார்.

33 ஆண்டுகளாக அந்தச் சந்திப்புக்காகக் காத்திருந்த அவர், தன் தாயாரைச் சந்திக்க உதவிய அனைவருக்கும் டுயின் தளத்தில் நன்றியைத் தெரிவித்தார்.

Mon, 01/03/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை