காஷ்மிர் பனிச்சரிவில் சிக்கிய 30 பேர் மீட்பு

வடக்கு காஷ்மிரின் குக்வாரா மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலை பனிச்சரிவால் பாதிக்கப்பட்டதை அடுத்து குறைந்தது 30 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

பனிப்பொழிவு காரணமாக டங்தார் - சோவ்கி பில் நெடுஞ்சாலையில் இரு பனிச்சரிவு சம்பவங்கள் இடம்பெற்றதை அடுத்து பயணிகள் நிர்க்கதியாகியுள்ளனர். இதனை அடுத்து அங்கு விரைந்த இந்திய இராணுவத்தினர் மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

அவர்களின் கடும் போராட்டத்தின் பின் 30 பயணிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Fri, 01/21/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை