2021 இன் சிறந்த இளம் எம்.பியாக சாணக்கியன் தெரிவு

2021 இன் சிறந்த இளம் எம்.பியாக சாணக்கியன் தெரிவு-Shanakiyan Rasamanickam Best Young Parliamentarian 2021-Institute of Politics

சிறந்த இளம் பாராளுமன்ற உறுப்பினருக்கான 2021ஆம் ஆண்டுக்கான விருது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Institute of Politics எனும் அமைப்பினால் இந்த விருது இரா. சாணக்கியனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த விருது வழங்கும் நிகழ்வானது முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்றது.

எனினும், மட்டக்களப்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்புகள் மற்றும் வேறு சில முக்கிய காரணங்களினால் இரா. சாணக்கியன் இந்நிகழ்வில் பங்கேற்றிருக்கவில்லை என அவரது ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய Institute of Politics என்ற அமைப்பின் அலுவலகத்தில் வைத்து இரா. சாணக்கியனுக்கான விருது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sun, 01/30/2022 - 13:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை