அரசுக்கு நாளாந்தம் 20 மில். ரூபா நட்டம்

மின்னுற்பத்திக்கான டீசல் வழங்கல்:

இலங்கை மின்சார சபையிலிருந்து தகவல்

எரிபொருளை மாத்திரம் கொண்டு மின் உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதால் அரசாங்கத்துக்கு நாளாந்தம் 20 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாகவும் மின்சார சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய அரசாங்கத்திற்கு மாதாந்தம் சுமார் 600 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

களனி திஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் அரசிற்குச் சொந்தமான சிறிய மின்முனையம் டீசல் மாத்திரம் பயன்படுத்தப்பட்டு இயக்கப்படுவதனால் அரசாங்கத்திற்கு இந்த

நட்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீசல் மற்றும் மின்னுற்பத்திக்கான விசேட எண்ணெய் என்பன பயன்படுத்தப்பட்டு, மின்னுற்பத்தியினை மேற்கொள்வதன் ஊடாக இலாபம் அடைய முடியும் என மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் மின்னுற்பத்திக்கான எண்ணெய்யை மாத்திரம் பயன்படுத்திக் குறித்த மின்முனையத்தை இயக்குவதன் மூலம் அதிக இலாபம் அடைய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நாட்களில் டீசல் மற்றும் மின்னுற்பத்திக்கான எண்ணெய் என்பன பயன்படுத்தப்பட்டு களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் அரசிற்குச் சொந்தமான சிறிய மின்முனையம் இயக்கப்பட்டது.

எவ்வாறாயினும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் முழுமையாக மூடப்பட்டுள்ளமையினால் தற்போது களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் அரசிற்குச் சொந்தமான சிறிய மின்முனையம் டீசல் மாத்திரம் பயன்படுத்தப்பட்டு இயக்கப்படுகின்றது.

எனவே, மின்னுற்பத்திக்கான எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் குறித்த மின்முனையத்தை இலாபத்துடன் இயக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 01/28/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை