புது வருட தினத்தில் வாகன விபத்துகளில் 18 பேர் மரணம்

- நீரில் மூழ்கி நால்வர் மரணம்; இருவரைக் காணவில்லை

நேற்றையதினம் (01) இடம்பெற்ற வாகன விபத்துகளில் 18 பேர் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

இதில் 10 பேர் நேற்றையதினமும் (01) ஏனைய 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இன்றையதினம் (02) மரணித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது தவிர புதுவருட தினமான நேற்றையதினம் (01) நாட்டின் பல்வேறு பகுதிகளில், நீர் நிலைகள் மற்றும் கடலில் நீராடச் சென்ற நிலையில் பல மரணங்களும் நிகழ்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

விபத்துகளில் மரணம்

 • வவுனியா: யாழ்ப்பாணம் - கண்டி (A9) வீதியில் முச்சக்கர வண்டி - கெப் விபத்து - தோணிக்கல்லைச் சேர்ந்த 35 வயது முச்சக்கரண வண்டி சாரதி மரணம்
 • நீர்கொழும்பு: நிகலஸ் மாகஸ் வீதியில், முச்சக்கர வண்டி - சைக்கிளில் மோதி விபத்து - நீர்கொழும்பைச் சேர்ந்த, சைக்கிளில் சென்ற 36 வயது நபர் மரணம்
 • முள்ளியாவளை: புதுக்குடியிருப்பு - கேப்பாபுலவு வீதியில், டிப்பர் - மோட்டார்சைக்கிள் விபத்து - மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரில், முள்ளியாவளையைச் சேர்ந்த 48, 17 வயதுடைய இருவர் மரணம்
 • பேலியகொடை, வனவாசல: கார் - புகையிரதம் விபத்து - வத்தளையைச் சேர்ந்த 55 வயது நபர் மரணம்
 • ஹோமாகம, ஹைலெவல் வீதி: லொறி - மோட்டார்சைக்கிள் விபத்து - பிங்கிரியவைச் சேர்ந்த 30 வயது நபர் மரணம்
 • திருகோணமலை - ஹபரண வீதி: பஸ் - கார் விபத்து - மஹரகமவைச் சேர்ந்த 27 வயது நபர் மரணம்
 • பின்னவல, ஹேன்யாய - அஸ்வெத்தும: மலைப்பாங்கான பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிளில் சென்ற  பின்னவலவைச் சேர்ந்த 10 வயது சிறுவன் மோட்டார் சைக்கிளிலிருந்து வீழ்ந்து மரணம்
 • ஹபராதுவ, காலி - மாத்தறை வீதி: வீதியோரமாகச் சென்ற நபரை மோதிய அடையாளம் காணப்படாத வாகனம் மோதி விபத்து - ஹபராதுவவைச் சேர்ந்த 22 வயது நபர் மரணம்

மூழ்கி மரணம்

 • துன்கல்பிட்டிய: கெபுன்கொட கடலில் நீராடச் சென்ற 5 இளைஞர்களில், 4 பேர் காப்பாற்றப்பட்ட நிலையில், பமுணுகம, ஏகலவைச் சேர்ந்த 17, 23 வயதுடைய 2 பேர் வைத்தியசாலையில் மரணம்; 21 வயதான அம்பேவல பிரதேசத்தைச் சேர்ந்த நபரைக் காணவில்லை
 • தெனியாய: பல்லேகம, சத்மால எல்லையில் நீராடச் சென்ற கின்தோட்டையைச் சேர்ந்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை (48) மகன் (16) மரணம்.
  அஹுங்கல்ல: வடக்கு ஹரஸ்பொல மீன்பிடி துறைமுகத்திலிருந்து டிசம்பர் 31ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்ற நபர், ஜனவரி 01ஆம் திகதி வீடு திரும்ப வேண்டிய நிலையில், அஹுங்கல்லவைச் சேர்ந்த நபர் வீடு திரும்பவில்லை.
Sun, 01/02/2022 - 14:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை