சீனாவில் நிலச்சரிவு: 14 பேர் உயிரிழப்பு

சீனாவின் குய்சோவ் மாகாணத்தின் பிஜி நகரில், கட்டுமானப் பணியின் போது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.

அங்கு மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டு வந்த நிலையில், திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு கட்டுமான தொழிலாளர்கள் 17 பேர் இடிபாடுகளில் சிக்கினர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர், 14 பேரை சடலமாக மீட்டுள்ளனர்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த மூவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் பிஜி நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Thu, 01/06/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை