தேவத்தை பசிலிகாவில் பேராயர் தலைமையில் இன்று விசேட வழிபாடுகள்
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு 1000 தினங்கள் நிறைவடையும் நிலையில் அதனையொட்டிய விசேட சமய நிகழ்வுகள் இன்றைய தினம் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் தேவத்தை தேசிய பசிலிகா பேராலயத்தில் இன்று நடைபெறவுள்ளன.
பேராயரின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுகளில் நாட்டின் அனைத்து மறை மாவட்டங்களையும் சேர்ந்த ஆயர்கள் மற்றும் துணை ஆயர்களும் பங்கேற்கவுள்ளனர்.
மேற்படி குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோரின் நினைவாக பேராயர் தலைமையில் விசேட கூட்டுத்திருப்பலி நடைபெறவுள்ளது. மேற்படி நிகழ்வுகள் தொடர்பில் பேராயர் இல்லம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று 1000 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலும் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய நீதி இதுவரை பெற்றுக் கொடுக்கப்பட வில்லை.
அதேவேளை நாட்டில் நிலவும் சமூக, பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் இறைவனிடம் மன்றாடுவதற்காக தேசிய மட்டத்தில் செப வழிபாடு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க இன்றையதினம் 14ஆம் திகதி தேவத்தை பசிலிக்காவிலுள்ள மாதா கெபியின் அருகிலிருந்து ஆயர்கள், குருக்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் மற்றும் விசுவாசிகள் கலந்துகொள்ளும் செபமாலை தியான பவனி நடைபெறவுள்ளது..(ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம்
from tkn