மார்ச் 04 இல் மீண்டும் விசாரணைக்கு வரும்

பிணைமுறி மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் உட்பட பத்து சந்தேகநபர்களுக்கு எதிரான கணினி சாட்சியங்களின் பட்டியலை சட்டமா அதிபர் நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் சமர்ப்பித்தார்.

மேலும், கணினி ஆதாரங்களின் பட்டியலின் நகல்கள், பெஞ்ச் அனுமதியுடன் வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் 4 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

2015 ஆம் ஆண்டு பிணை முறி மோசடி தொடர்பான வழக்கு நீதியரசர்களான சம்பா ஜானகி ராஜரத்ன, தமித் தொட்டவத்த மற்றும் நாமல் பலல்ல ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி பிணைமுறி மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரான அர்ஜூன் மகேந்திரன் உள்ளிட்ட 10 பிரதிவாதிகளுக்கு எதிராக 23 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

 

Sat, 01/08/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை