மரண தண்டனை வழங்க மனோ MP வேண்டுகோள்

பாகிஸ்தானில் இலங்கை பிரஜையைக் கொலை செய்தவர்களிற்கு உச்சபட்ச மரணதண்டனை வழங்கப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனைத்  தெரிவித்துள்ளார். அவர் அதில் மேலும் குறிப்பிடுகையில்,

சியால்கோட்டில் இலங்கை நிர்வாக அதிகாரி பிரியந்த குமாரவை அடித்து, எரித்து, கொலை செய்த அடிப்படைவாத கும்பலுக்கு, குறிப்பிட்ட காலவரைக்குள், அதிவேக சட்ட நடவடிக்கை மூலம், உச்சபட்ச மரண தண்டனை வழங்கப்படுவதைத் தவிர எதுவும் எங்களை ஆறுதல் படுத்தாது 'மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Mon, 12/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை