சமையல் Gas வெடிப்பினால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு

அரசு வழங்க ஏற்பாடு என்கிறார் லசந்த அழகியவண்ண

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்களினால் ஏற்பட்ட உடைமைகள் மற்றும் உபகரணங்கள் சேதங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தினால் உரிய நட்டஈடு வழங்கப்படுமென இராஜாங்க அமைச்சரான லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.  நாட்டின் பல பாகங்களில்   திடீரென அதிகரித்துள்ள உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணையை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாந்த வல்பொல தலைமையிலான எட்டு பேர் கொண்ட நிபுணர் குழு தனது அறிக்கையை ஒரு வார காலத்துக்குள் வெளியிடவுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக தெளிவான திட்டமொன்று உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Thu, 12/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை