அமெரிக்காவுக்குள் நுழைந்த "ஒமிக்ேரான்"

முதலாவது தொற்றாளர் அடையாளம்

அமெரிக்காவில் ஒமிக்ரோன் திரிபுடனான முதலாவது கொவிட்19 தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.ஆபிரிக்க நாடொன்றிலிருந்து நாடு திரும்பிய ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த நபரும், அவருடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்களும் அடையாளம் காணப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொற்று உறுதியான நபர் முழுமையாக தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஒமிக்ரொன் திரிபு கண்டறியப்பட்டதையடுத்து, அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்துமாறு வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Fri, 12/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை