மக்கா பெரிய பள்ளிவாசலில் மீண்டும் ‘சமூக இடைவெளி’

சவூதி அரேபியாவில் கொரோனா தொற்று சம்பவங்கள் அதிகரித்ததை அடுத்து முஸ்லிம்களின் புனிதத் தலமான மக்கா பெரிய பள்ளிவாசலில் சமூக இடைவெளி கட்டுப்பாடு மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

கஃபாவை சூழ கட்டப்பட்ட பள்ளிவாசலில் சமூக இடைவெளிக்கான அடையாளம் கடந்த ஒக்டோபர் 17 ஆம் திகதி அழிக்கப்பட்ட நிலையில், ஊழியர்கள் மீண்டும் அந்த அடையாளங்களை இட ஆரம்பித்துள்ளனர்.

வழிபாட்டாளர்கள் மற்றும் யாத்திரிகர்களுக்கு மீண்டும் சமூக இடைவெளி கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் என்று சவூதி நிர்வாகம் அறிவித்துள்ளது. உள்ளக மற்றும் வெளிப்புற பகுதிகளில் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் மீண்டும் கட்டாயமாக்கப்படுவதாக சவூதி முன்னதாக குறிப்பிட்டிருந்தது.

சவூதியில் கடந்த புதன்கிழமை 744 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகின. இது கடந்த ஓகஸ்ட் நடுப்பகுதியில் இருந்து பதிவான அதிக எண்ணிக்கையாகும்.

கொவிட்–19 தொற்று முஸ்லிம் புனித யாத்திரிகைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Fri, 12/31/2021 - 07:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை