கொரோனா தொற்று: பெல்ஜியத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நீர்யானைகள்

பெல்ஜியம் நாட்டில் உள்ள மிருகக்காட்சி சாலையில் இரு நீர்யானைகளுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவை இரண்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

14 வயதான இமானி மற்றும் 41 வயதான ஹெர்மியென் என்ற இந்த நீர்யானைகளுக்கு எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

நீர்யானைகள் இரண்டும் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாகவும், மூக்கு ஒழுகுதல் மட்டுமே இருப்பதாகவும் மிருகக்காட்சி சாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். அவற்றுக்கு கொரோனா தொற்று குணமாகும் வரை மிருகக்காட்சி சாலை கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

அவற்றின் இருப்பிடம் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளன. நீர்யானைகளை கவனிப்போருக்குக் கொரோனா தொற்று இல்லை என்றாலும், முகக்கவசம் அணிதல், தங்கள் பொருட்களை முழுவதுமாக கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கனடாவில் மூன்று காட்டு மான்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கடந்த வாரம் அடையாளம் காணப்பட்டது. நாட்டின் காட்டு விலக்கிற்கு தொற்று ஏற்பட்ட சம்பவம் கண்டுபிக்கப்பட்டது இது முதல் முறையாகும்.

Mon, 12/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை