இல்லங்கள் தோறும் மகிழ்ச்சி நிலவட்டும்

அமைச்சர் டக்ளஸ் கிறிஸ்மஸ் வாழ்த்து

அகிலத்தின் ஒளியாக கருணை மைந்தன் இயேசு பிரான் அவதரித்த நத்தார் தினம் தேசமெங்கும் நித்திய ஒளி உண்டாகி நீடித்து நிலவும் நாளாக கனியட்டுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தனது நத்தார் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாம் தோற்றுப்போன இன சமூகமல்ல, மாறாக கற்பாறைகளில் விதைக்கப்பட்ட தவறான வழிமுறைகளே இங்கு தோற்றுப்போனவை.

யுத்தம் தந்த இரத்தப் பலிகளிலிருந்து நீங்கள் மீண்டு நிமிரவும் சாம்பல் மேட்டிலிருந்து உங்கள் சமாதான சகவாழ்வு திரும்பவும் காலமொன்று கனிந்து வந்தது போல், எமது பூமியில் இன்று நீங்கள் எதிர்கொள்ளும் எல்லா இடர்களும் இல்லாதொழிந்து போகும். துயருறுவோர் ஆறுதல் பெறுவர், கனிவுடையோர் தமக்கான தேசத்தை உரிமை சொத்தாக்குவர், நோய் பிணிகள் இல்லாத, வறுமை, பஞ்சம், பசி, பட்டினி இல்லாத, யாரும் யாரையும் அடிமை கொள்ளாத புதியதொரு சமாதான இராச்சியத்தையே நாம் தொடர்ந்தும் விரும்புவோம்.

அன்பும் கருனையும் அவனியை ஆளட்டும். ஒவ்வொரு இல்லங்கள் தோறும் நாளைய நம்பிக்கையோடு மகிழ்ச்சி நிலவட்டும், என்றும் தெரிவித்துள்ளார்.

 

   

Sat, 12/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை