கசோக்கி கொலை தொடர்பில் சந்தேகநபர் பிரான்ஸில் கைது

சவூதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோக்கியின் கொலையுடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் சவூதி நாட்டவர் ஒருவர் பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலித் ஏத் அலோதைபி என்பவர் பாரிஸின் சார்ல்ஸ் டி கவுல் விமானநிலையத்தில் வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதாக பிரான்ஸ் பொலிஸாரை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இவர் இந்த கொலை தொடர்பில் துருக்கியால் தேடப்பட்டு வரும் 26 சவூதி நாட்டவர்களில் ஒருவர் என்று நம்பப்படுகிறது.

எனினும் இந்த கைது நடவடிக்கை தவறாக இடம்பெற்றிருப்பதாகவும் இந்த கொலையுடன் தொடர்புபட்டவர்கள் சவூதியில் குற்றங்காணப்பட்டுள்ளனர் என்றும் சவூதி அதிகாரி ஒரு குறிப்பிட்டுள்ளார்.

சவூதியின் முன்னாள் அரச காவலரான 33 வயது அலோதைபி, தனது சொந்த பெயரில் பயணித்திருந்த நிலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

சவூதி அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை வெளியிட்டு வந்த கசோக்கி 2018 ஒக்டோபரில் ஸ்தன்பூலில் உள்ள சவூதி துணைத் தூதரகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

Thu, 12/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை