ஏழுமலையான் மீது பிரதமர் கொண்டுள்ள நம்பிக்கை

இந்துக்களுக்கு நெகிழ்வு என பாபுசர்மா புளகாங்கிதம்

ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்‌ஷ பதவி வகித்த காலத்தில் இந்தியா செல்லும் சந்தர்ப்பங்களில் திருப்பதி வெங்கடேஸ்வர பெருமானை தரிசித்து ஆசி பெறுவது அவர் வழமையாக மேற்கொள்ளும் பக்திபூர்வமான வணக்க செயற்பாடாகும்.

அதே போன்று அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும் கூட திருப்பதி வெங்கடேஸ்வர பெருமானை தரிசித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்பொழுது அவர் பிரதமராக தனிப்பட்ட விஜயமாக திருப்பதி வெங்கடேஸ்வர பெருமானை குடும்ப சமேதராய் தரிசித்திருக்கின்றார். அவர் திருப்பதி வெங்கடேஸ்வர பெருமான் மீது அளவுகடந்த பக்தி கொண்டவர். அதேவேளை ஏழுமலையானின் பூரண அனுக்கிரகம் பெற்றவர்.

அவரது உன்னதமான மஹாவிஷ்ணு பெருமானின் மீது கொண்டுள்ள பக்தியானது இந்து மக்களை பக்தி பரவசம் ஆக்குகின்றதென சர்வதேச இந்து மத பீடத்தின் செயலாளர் சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா தெரிவித்துள்ளார்.

 

 

Sat, 12/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை