முஸ்லிம் நாடுகளுடனான உறவை உடைக்கும் எதிரணியின் முயற்சி தோல்வி

நல்லாட்சியில் -முஸ்லிம்கள் புறக்கணிப்பு என்கிறார் ஜோன்ஸ்டன்

எமது அரசாங்கத்திற்கு முஸ்லிம் நாடுகள் உதவுவதில்லையென்ற எதிர்க்கட்சிகளின் கருத்து பொய்யாகியுள்ளது. முஸ்லிம் நாடுகள் நமது நட்பு நாடுகள். அந்த உறவை தான் எதிர்க்கட்சிகள் உடைக்கப் பார்க்கின்றன என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

முஸ்லிம்களுக்கும் தங்களுக்குமி டையில் பிளவை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக தெரிவித்த அவர் முஸ்லிம்களுக்கு நல்லாட்சி அரசாங்கம் என்ன செய்ததென கேள்வி எழுப்பினார்.  மேலும் தெரிவித்த அவர்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான எமது அரசாங்கம் இந்நாட்டில் வாழும் சிங்கள, தமிழ்,முஸ்லிம்,பர்கர் என அனைத்து சமூகத்தினருக்கும் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. இந்த நாடு பாதுகாப்பற்ற நாடாக மாற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அனைத்து இனத்தவர்களும் ஒன்றாக வாழும் வகையில் இந்த நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வோம். அடுத்த 03 வருடங்களை இலங்கை வரலாற்றில் மிகவும் முன்னேறிய காலகட்டமாக மாற்றுவோம்.

எமது அரசாங்கத்திற்கு முஸ்லிம் நாடுகள் உதவுவதில்லையென்ற கருத்தை எதிர்க்கட்சிகள் பரப்ப முயற்சிக்கின்றன. அதுதான் எதிர்க்கட்சிகளின் அரசியல் போக்காகும். வீதிகள் அமைக்க சவூதி அரேபியா எங்களுக்கு நிதி வழங்கியுள்ளது. முஸ்லிம்களுக்கும் எங்களுக்குமிடையில் பிளவை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. தமிழர்கள், கத்தோலிக்கர், பர்கர்கள், மலாய்க்காரர் என பிரிவினையை ஏற்படுத்துவது எதிர்க்கட்சிகளின் பணியாக உள்ளது.

எமது அரசாங்கம் எதிர்க்கட்சிகளைப் போன்று மக்களை பிளவுபடுத்தும் அரசல்ல. எமது ஜனாதிபதியின் வருகையின் பின்னர் முழு நாட்டு மக்களும் பாதுகாக்கப்பட்டனர். இன்று முஸ்லிம்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

கத்தோலிக்கர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. பௌத்தர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. மலாய், பர்கர்களும் ஒரு பிரச்சினையும் இல்லை. வங்குரோத்தானவர்கள்தான் இப்படிப் பிரிவினைகளைப் பேசுகிறார்கள்.

முஸ்லிம் நாடுகளுடனான எமது உறவு அவ்வாறாக உள்ளது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம் வெளிநாட்டு உறவுகளை பாலஸ்தீனத்திலிருந்து ஆரம்பித்தார். இந்த நாடுகளுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மிகவும் நட்புறவைக் கொண்டுள்ளார். எதிர்க்கட்சிகள் வாக்குகளைப் பெறுவதற்காக இனங்களையும் மதங்களையும் பிரிக்கின்றன.

கிழக்கிலுள்ள பெரும்பாலான மக்கள் நல்லாட்சி அரசாங்கத்திற்கு வாக்களித்துள்ளனர். இந்தப் பிரதேசங்களுக்கு நல்லாட்சி அரசாங்கம் என்ன செய்தது? அவர்கள் உங்களுக்கு செய்த சேவை ஏதேனும் உண்டா? இப்பிரதேசங்களில் பெரும்பாலான வீதிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நிர்மாணிக்கப்பட்டவையாகும். இப்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பெரும்பாலான வீதிகளை அமைத்து வருகிறார்.

இந்த முஸ்லிம்களுக்கு நல்லாட்சி அரசாங்கம் என்ன செய்தது? ஜனாதிபதி கோட்டாபய கோத்தபாய ராஜபக்ஷ , வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும், அனைவரையும் நேசிக்கின்றார்.

எனவே, அவர் முழு நாட்டிற்கும் சேவையாற்றுகிறார். எதிரணியிடம் ஏமாற வேண்டாம் என்று வடக்கு கிழக்கு மக்களிடம் கோருகிறோம். எமக்கு வாக்களிக்காவிட்டாலும் உங்களுக்காக சேவையாற்றுவோம் என்றார்.

7200 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட பிபிலை முதல் செங்கலடி வரையிலான வீதியை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.(பா)

Thu, 12/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை