மறைந்த முன்னாள் அமைச்சர் குணரத்ன வீரகோனுக்கு பிரதமர் இறுதி அஞ்சலி

மறைந்த முன்னாள் அமைச்சர் குணரத்ன வீரகோனுக்கு பிரதமர் இறுதி அஞ்சலி-Prime Minister Mahinda Rajapaksa Last Respect Gunaratne Weerakoon

மறைந்த முன்னாள் அமைச்சர் குணரத்ன வீரகோனின் பூதவுடலுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (26) இறுதி அஞ்சலி செலுத்தினார்.

கொழும்பில் உள்ள தனியார் மலர்ச் சாலையில் வைக்கப்பட்டுள்ள அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பிரதமர், அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் அமைச்சர் குணரத்ன வீரகோனுக்கு பிரதமர் இறுதி அஞ்சலி-Prime Minister Mahinda Rajapaksa Last Respect Gunaratne Weerakoon

மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து அரசியலுக்கு வந்த குணரத்ன வீரகோன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி முதன் முறையாக கரந்தெனிய பிரதேச சபைக்கு தெரிவுசெய்யப்பட்டார்.

அன்று முதல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து பயணித்த குணரத்ன வீரகோன் அவர்கள் தென் மாகாண சபையின் உறுப்பினராகவும், பின்னர் காலி மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகி அமைச்சரவை அமைச்சராகவும் சேவையாற்றினார்.

இரு பிள்ளைகளின் தந்தையான குணரத்ன வீரகோன் தனது 74ஆவது வயதில் உயிரிழந்தார்.

Sun, 12/26/2021 - 16:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை