ஐந்து அடி இரும்பு கொக்கியை அகற்றி வைத்தியர்கள் சாதனை

காலி, கராப்பிட்டிய ஆஸ்பத்திரியில் சத்திரசிகிச்சை

காலி, கராப்பிட்டிய வைத்திசாலையில் பெண் ஒருவருக்கு அபூர்வ சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரத்கம, மொரொய்துடுவ பிரதேசத்தை சேர்ந்த பெண்ணின் இடது கை தோள்பட்டை வழியாக ஊடுருவிய மீன் பிடிக்க பயன்படுத்தும் ஐந்து அடி இரும்பு  கொக்கி வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.

காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவின் துறைசார் நிபுணர்களான ரசிக்க பத்திரன மற்றும் பாலித்த படடுவ ஆகியோரால் அவ் இரும்பு கொக்கி அகற்றப்பட்டுள்ளது.

சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டவர் 40 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயென தெரியவந்துள்ளது. இந்த பெண்ணின் கணவர், மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் இரும்பு கொக்கியால் பெண்ணை குத்தியுள்ளார்.

நேற்றுமுன்தினம் அதிகாலை 1.30 மணியளவில் குத்திய கொக்கியுடன் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதன்போது வைத்தியர்கள் இருவரால் ஒன்றரை மணி நேர சத்திரசிகிச்சையின் பின்னர் 05 அடி நீளமான இரும்பு கொக்கி அகற்றப்பட்டு பெண் காப்பாற்றப்பட்டுள்ளார்.

தற்போது அந்த பெண் மிகவும் சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக வைத்தியர் தெரிவித்துள்ளார். வீட்டில் கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கணவர் இந்த செயலை செய்துள்ளார்.

எனினும் அதிஷ்டவசமாக அந் பெண்ணின் கை நரம்பு அல்லது எலும்புக்கு சேதம் ஏற்படாத வகையில் 05 அடி கொக்கி இறங்கியுள்ளது. இதனால் உயிருக்கு ஆபத்தின்றி அந்த பெண் காப்பாற்றப்பட்டுள்ளாரென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Thu, 12/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை