‘ஒமிக்ரோன்’ வைரஸ் தென்னாபிரிக்காவில் உருவாகவில்லை

‘ஒமிக்ரோன்’ கொரோனா வைரஸ் திரிபை தென்னாபிரிக்க மருத்துவர்களே முதலில் கண்டுபிடித்தபோதும், இந்தத் திரிபு தென்னாபிரிக்காவிலிருந்து உருவாகவில்லையென தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சண்டைல் எட்வின்  சல்க் தெரிவித்துள்ளார்.

இலங்கை- –தென்னாபிரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தெரிவு (29) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட தென்னாபிரிக்க உயர் ஸ்தானிகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை-–தென்னாபிரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வாழ்த்தைத் தெரிவித்த இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சண்டைல் எட்வின் சல்க், ஒமிக்ரோன்’ கொரோனா வைரஸ் திரிபு தொடர்பில் ஊடகங்களில் வெளியிடப்படும் அறிக்கைகளையும் மறுத்தார்.

 

Wed, 12/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை