இழப்பீடு அல்ல; காணாமல் போன பிள்ளையை தாருங்கள்

ஜனாதிபதி ஆணைக்குழு முன் தாய் உருக்கம்

2006ஆம் ஆண்டு யாழ். திருநெல்வேலி பகுதியில் உள்ள கடையொன்றில் வேலை செய்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தனது பிள்ளையே வேண்டும், இழப்பீடு வேண்டாம் என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்பாக ஒரு தாய் கூறியுள்ளார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அமர்வு நேற்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே குறித்த தாய் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், திருநெல்வேலி கடை ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் எனது மகன் காணாமல் போயிருந்தார். எனது மகனை மீட்டுத் தருமாறு பல்வேறு தரப்பினரிடம் கேட்டேன்.

எனது உடல்நிலை மாத்திரையின்றி இயங்காத நிலையில் தினமும் மாத்திரைகளை உற்கொண்டே எனது அன்றாடக் கடமைகளை மேற்கொண்டு வருகிறேன். எனக்கு இழப்பீடு வேண்டாம் எனது பிள்ளையை மீட்டுத் தாருங்கள் என ஆணைக்குழுவிடம் உருக்கமான கோரிக்கையை முன்வைத்தார்.

 

Tue, 12/14/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை