ஈக்வடோர் நாட்டில் தடுப்பூசி கட்டாயம்

ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபு வேகமாக பரவி வரும் நிலையில் ஈக்வடோரில் பெரும்பாலான குடிமக்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்த போதுமான டோஸ்கள் இருப்பதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மருத்துவ ரீதியில் நியாயப்படுத்த முடியுமானவர்களுக்கு இதில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஈக்வடோரில் தற்போது தகுதியுடைய மக்கள் தொகையில் 77.2 வீதமானவர்கள் இரண்டு டோஸ்களை பெற்றுள்ளனர்.

தவிர, 900,000க்கும் அதிமானவர்கள் கூடுதல் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

தடுப்பு மருந்து வைரசுக்கு எதிரான கவசமாக இருப்பதாகவும் தீவிர நோய்வாய்ப்படுவது, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது மற்றும் மரணத்தை தடுப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஆஸ்திரியா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளும் இது போன்ற நடவடிக்கையை எடுக்க திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sat, 12/25/2021 - 08:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை