கூப்பன் முறையில் அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கவும்

அமைச்சர் வாசுதேவ அரசிடம் வேண்டுகோள்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக அத்தியாவசிய உணவுப் பொருட்களை கூப்பன் முறைமையில் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்றுள்ள செய்தியாளர் மாநாடொன்றில் அதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்ைகயில் அரசாங்கம் மிக நெருக்கடியான நிலைமையை எதிர்நோக்கியுள்ளது. அதனால் மக்களுக்கும் ஓரளவு சிக்கல்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.

மக்களின் அந்த நிலைமையை நிவர்த்திசெய்வதற்கு நம்பிக்கையை கட்டியெழுப்ப நாம் தயாராகவுள்ளோம். அதற்கிணங்க குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்களை கூப்பன் மறையில் பெற்றுக்கொடுக்குமாறு நாம் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளோம்.

அதேவேளை, எருபொருள் தெரிவான சிக்கல்களை நிவர்த்திக்கும்வகையில் அதனையும் கூப்பன் முறையில் வழங்குவதற்கு நடவடிக்ைக எடுக்குமாறும் நாம் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளோம். அதன்மூலம் எருபொருள் பாவனை குறைத்துக்ெகாள்ளவும் வழிவகை அவசியமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 12/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை