"ஒமிக்ரோன்" தொற்றுடன் வந்தவர் தடுப்பூசி எதனையும் போடவில்லை

நாட்டிற்குள் நுழைய அனுமதித்தது எவ்வாறு என GMOA விசனம்

 

தடுப்பூசி போடப்படாத நிலையில், ஒமிக்ரோன் தொற்றுக்கு உள்ளான பெண் எப்படி நாட்டிலிருந்து வெளியேறி, எப்படி நாட்டுக்குள் பிரவேசித்தார் என்பது குறித்து உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) வலியுறுத்தியுள்ளது.

கொவிட் செயலணியிடம் இது தொடர்பில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அச் சங்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

சுகாதார பணிப்பாளர் நாயகம் வழங்கிய தொடர்ச்சியான சுகாதார வழிகாட்டுதல்களின்படி, முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் மட்டுமே நாட்டிற்குள் நுழைய முடியும்.

Tue, 12/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை